மகாராஷ்ட்ராவில் பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை ரூபாய் 200 லிருந்து ரூபாய் ஆயிரமாக 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த பத்து 12 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் விதிகளை மீறுவோர் மீது கருணையே காட்டாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹார் தெரிவித்துள்ளார்.
திருமணம் போன்ற சடங்குகளிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மணப்பெண் , மாப்பிள்ளை மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும் இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.