வருகிற நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியும், தனிமனித இடைவெளியும் போதுமானது என்பது ஆய்வு முடிவுகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
வருகிற நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்தின் சவுதாம்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது ஆய்வில், பெரும்பாலான நகரங்களில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வீரியமான தடுப்பூசி திட்டங்கள் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவையே போதுமானது என தெரிய வந்துள்ளது.
வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை தேவையற்றது என்றும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.