அசாமில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொங்கைகான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்ட மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், அசாமில் முந்தைய அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டதால் பிரம்மபுத்திராவின் வடக்குக் கரைப் பகுதிகள் போக்குவரத்து, நலவாழ்வு, கல்வி, தொழில் ஆகிய துறைகளில் பின்தங்கி இருந்ததாகத் தெரிவித்தார்.
முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இப்போதைய அரசு அக்கறை காட்டி வருவதாகத் தெரிவித்தார்.