இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் 16 மணி நேரம் பேச்சு நடத்தியும் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சிய பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதில் உறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை.
லடாக்கில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையிலான பத்தாம் சுற்றுப் பேச்சு சனியன்று பகல் பத்து மணிக்குத் தொடங்கி இரவு 2 மணி வரை நடைபெற்றது.
அப்போது கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக், தேப்சாங் ஆகிய இடங்களில் பதற்றத்தைத் தணிப்பது குறித்து ஒரு முடிவு எட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இணக்கத் தீர்வை எட்டுவதற்காக மேற்கொண்டு பேச்சு நடத்துவது என இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.