அமெரிக்காவில் போயிங் 777 விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அங்கு பயன்படுத்தப்படும் 24 போயிங் 777 விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு 231 பயணிகளுடன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் நடிவானில் தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்தில் திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விபத்தை தொடர்ந்து பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜீன்களுடன் கூடிய போயிங் 777 விமானங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நிறுவனத்துக்கு பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.