சர்வதேச விமான பயணிகளுக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, அனைத்து பயணிகளும் பயணத்திற்கு முன்பாக ஏர் சுவிதா என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 72 மணி நேர பயணத்திற்கு முன்பாக RT-PCR பரிசோதனை மூலம் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையில் கொரோனா பரிசோதனைக்கு பின் பயணிகள் 14 நாட்களுக்கு தங்களை சுய கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் எனவும், பரிசோதனை அறிக்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் சுகாதார விதிகளின் படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.