பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் குவாரண்டைனில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளும் தாங்கள் புறப்படும் இடங்களில் RT-PCR நெகடிவ் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரும் அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெங்களூரு வரும் டிரான்சிஸ்ட் பயணிகள் நெகடிவ் சோதனை அறிக்கை இல்லை என்றால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.