மும்பையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்த ஆயிரக்கணக்கான தற்காப்பு வீரர்களை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.
சுமார் 2 கோடி மக்கள் வசிக்கும் மக்கள் நெரிசல் மிக்க மும்பையில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. முகக் கவசம் அணிவது ஒன்றே பாதுகாப்பானது என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
மின்சார ரயில்களில் முகக்கவசம் அணியாத ஆயிரக்கணக்கானோரை பிடித்து அபராதம் விதித்து வரும் மாநகராட்சி அதிகாரிகள் தற்போதுதற்காப்பு வீரர்களின் உதவியை நாடியுள்ளனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயணிகளை இந்த மார்ஷல் படையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாதோரை சுற்றி வளைத்தனர்