உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் அணை, ரிஷிகங்கா மின்நிலையம் உள்ளிட்ட இடங்கள் வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தன. மின் உற்பத்தி நிலைய சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 13 நாளாக நீடித்து வருகிறது.
அங்கிருந்து மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ரெய்னியில் உள்ள முக்கிய இடங்களில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய தேசிய மீட்பு படையினர், ரிஷிகங்காவின் மேல் பகுதியில் குப்பைகளை அகற்றுவது சவாலாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.