மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கிருந்து வருவோர் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக ஆறாயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகத்துக்கு விமானம், ரயில், பேருந்து, தனியார் வாகனம் ஆகியவற்றில் வருவோர் கொரோனா தொற்று இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்று அவர்களின் வருகைக்கு 3 நாட்களுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.