ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் இரண்டு முறை போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பூசி இப்போது 6 வார இடைவெளியுடன் இரண்டு முறை போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்டு ஆய்வு ஒன்றை நடத்தினார். அதில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டதும் 3 மாதங்களுக்கு அது 76 சதவிகத பாதுகாப்பை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.
3 மாத இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது டோசை போட்டால் போதும் எனவும், இதனால் பல நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை விரைவாக போட்டு முடிக்க முடியும் எனவும் தி லான்செட் தெரிவித்துள்ளது.