சென்னை தலைமைச் செயலகம் முன்பு அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அம்ச 6 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் எதிர்பாராவிதமாக தலைமைச் செயலகம் நோக்கி ஓடி வந்து, கடற்கரை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போதிய போலீசாரும் அப்போது இல்லாததால் அவர்களை தடுக்க முடியாமல் போனது.
போராட்டத்தால் போக்குரவத்து பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனர். முன்னெச்சரிக்கையாக தலைமைச் செயலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.