இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய வந்துள்ள 24 வெளிநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் நேற்று ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பாகிஸ்தானால் தூண்டி விடப்படும் எல்லைத் தாண்டிய தீவிரவாதம் குறித்து கேட்டறிந்தனர்.
தூதரக அதிகாரிகளை சந்தித்த ராணுவ உயரதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை டிரோன் விமானங்கள் மூலம் எல்லைத்தாண்டி பாகிஸ்தான் சப்ளை செய்வதாக தெரிவித்தனர்.
ரகசிய சுரங்கப்பாதை அமைத்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்வதையும் தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதையும் ராணுவ அதிகாரிகள் விளக்கினர்.