மழைக்காலம் இல்லாத போதும் நேற்றிரவு மும்பை, நாசிக் போன்ற மகாராஷ்ட்ராவின் சில முக்கிய நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
வழக்கத்திற்கு மாறான இந்த மழைப் பொழிதலால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. மக்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்தனர்.
இதனிடையே ஜல்னா மாவட்டத்தில் சீசனுக்கு ஒவ்வாத வகையில் திடீரென ஆலங்கட்டி மழையுடன் புயல் காற்று வீசியது. இதனால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
ஏற்கனவே அதிகமான கனமழை காரணமாக தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம் போன்ற காய்களின் விலை உயர்ந்துள்ளது.