நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக மார்சில் தரையிரங்கிய நிலையில் அதன் வழிநடத்துக் குழுவின் தலைவர் இந்திய வம்சாவளி பெண் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்துக் குழுவின் தலைவராக பணியாற்றி திட்டம் வெற்றியடைய முக்கிய பங்கு வகித்து உள்ளார். தனது 1-ஆம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் ஒரு குழந்தை நல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சுவாதி மோகன் நாசாவின் சனி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் கஸ்ஸினி மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிரேல் உள்ளிட்ட திட்டங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.