நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.