டெலிமார்க்கெட்டிங் என்ற பெயரில் தொலைப்பேசி பயனாளர்களை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், டெலிமார்க்கெட்டிங் மூலம் நிதி மோசடி நடைபெறுவதை தடுக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேவையில்லாமல் பயனாளர்களை தொல்லை செய்பவர்களின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும், தொலைதொடர்பு பயனாளர்களை தொல்லை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மக்களுக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.