வலிமை அப்டேட் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் தம்மை வருத்தமடையச் செய்திருப்பதாகக் கூறியுள்ள நடிகர் அஜீத், ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தன் ரசிகர்கள் என்ற பெயரில், தான் நடித்துள்ள வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமுற வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னரே அறிவித்தபடி வலிமை படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும் என்று அஜீத் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே என்றும், ஆனால் தனக்கு சினிமா தொழில் என்றும் கூறியுள்ள அஜீத், தான் எடுக்கும் முடிவுகள் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.