பிரதமர் மோடி தொடங்கி வைத்த வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தில் பெண் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.
மூவாயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் 9 கிமீ வரை இத்திட்டத்தின்படி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. 8 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடக்கும் இந்த ரயில் சேவையில் ஒரு லட்சம் பயணிகள் கூடுதலாக பயணிக்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்க, இந்த வழித்தடத்தில் ரீனா என்ற பெண் ஓட்டுநர் மெட்ரோ ரயிலை இயக்கினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும், மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.