முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகி உள்ளார்.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி மேற்கொள்ளாத நிலையில் ஆர்ச்சருக்கு வலி நிவாரண மருந்து செலுத்தப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஆமதாபாத்தில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்குள் ஆர்ச்சர் குணமாக வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜோப்ரா அர்ச்சருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஓலி ஸ்டோன் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.