இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடி ஒன்று கொரேனாவால் உயிரிழப்பதற்கு முன் கைகோர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
பார்ட்டிங்டன் என்ற இடத்தைச் சேர்ந்த மார்கரெட் மற்றும் டெரிக் ஃபிரித் என்ற 91 வயதான ஜோடி கடந்த 70 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ட்ராஃபோர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அடுத்தடுத்த படுக்கையில் இருந்த இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தனர்.
இறுதியாக 3 நாட்கள் இடைவெளியில் மார்கரெட்டும், டெரிக்கும் உயிரிழந்தனர். இருவரும் கைகோர்த்து ஆறுதல் கூறிய புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.