உத்தரகாண்டில், மீட்பு பணிகளுக்கு சென்னை கிரிக்கெட் போட்டிக்கான தனது ஊதியத்தை வழங்குவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரர் rishabh pant தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பனிப்பாறைகள் வெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு உத்தரகாண்டில் பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிடுள்ளார்.
தற்போது, சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர், மீட்பு பணிகளுக்கு இந்த போட்டிக்கான ஊதியத்தை வழங்குவதாகவும், மேலும் பலர் உதவ முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.