ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதை நிர்ணயிப்பது தொடர்பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பாலின நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவுரவம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முரண்பாடான கருத்துகளைத் தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் இரு பாலினத்தவருக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கை ஒன்றாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.