திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதம் என்று உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. தடையை மீறுபவர்களுக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
சர்ச்சைக்குரிய இத்தகைய சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு
பதிலளித்த உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மத மாற்றங்கள் அல்லது திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வருவது தொடர்பான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.