மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தால் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை துவக்கிய மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், 1197 புள்ளிகள் உயர்வுடன் 49 ஆயிரத்து 797 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 366 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 647 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கியதன் எதிரொலியாக பங்கு சந்தையில் ஏற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் வாகன தயாரிப்பு, சிமென்ட், முன்னணி வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன. தனியார் நிதி மற்றும் கடன் நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.