திரையரங்குகளில் இன்று முதல் நூறு சதவீத இருக்கைகளையும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரையரங்குகளில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது உள்ளிட்டவை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்க கட்டணங்களை பெறுவதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதி உட்பட திரையரங்குகளின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி வைக்க வேண்டும், இடைவேளைகளில் கூட்டமாக எழுந்து செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.