பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து மும்பை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த நேரங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.முதல் சேவை தொடங்கி காலை ஏழு மணி வரையிலும் பொதுமக்கள் பயணிக்கலாம்.
இதே போன்று நண்பகல் தொடங்கி மாலை 4 மணி வரையிலும் இரவு 9 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பொதுமக்கள் யாவரும் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைப்பட்ட நேரங்களில் அத்தியாவசியப் பணியாளர்களும் பெண்களும் மட்டும் பயணிக்க மகாராஷ்ட்ரா அரசு அனுமதித்துள்ளது. மின்சார ரயில் மும்பையின் ஆதாரமாக இருக்கும் நிலையில் பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படுகின்றன.