அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசை கண்ணன் என்பவருக்கு வழங்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 11 மாடுகளை பிடித்து 3ஆவது பரிசு பெற்ற மதுரை அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பரிசுகள் வழங்கப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பினார். சனிக்கிழமையன்று, முதல்வர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விராட்டிப்பத்து கண்ணனுக்கு, முதல் பரிசு வழங்க, இடைக்காலத் தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.