வேதா நிலைய கட்டிடத்தை திறக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நினைவு இல்ல துவக்கவிழாவின் போது பிரதான நுழை வாயிலை மட்டும் திறக்கலாம், வேதா நிலைய கட்டிடத்தை திறக்க கூடாது, நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது, திறப்பு விழா முடிந்த பின் வேதா நிலையத்தின் சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த முறையீட்டை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ள தலைமை நீதிபதி, திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என அனுமதித்துள்ளார்.