நாளை நடைபெறும் தைப்பூசத்தேரோட்டத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அழகு குத்தி, காவடியுடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலையும், தைப்பூசதேரோட்டம் நாளையும் நடைபெறவுள்ளதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனியில் குவிந்து வருகின்றனர்.
உள்ளூர் பக்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.