சென்னை தேனாம்பேட்டை லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் வைத்திருந்த 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நகையை மதிப்பிடும் போது 5 கிலோ தங்க நகை காணவில்லை என மேலாளர் முருகன் புகார் அளித்துள்ளார்.
8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் ஒருவர், தனியாக இருந்த பெட்டியோடு கைலியில் மறைத்து பையை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி உள்ளது.
அதனை கொண்டு தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஊழியர் எங்கு சென்று இருப்பார் என்பது குறித்து தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.