தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 29, 30 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.