நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணைக்காக ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராகும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஜனவரி 18ஆம் தேதி மனு கொடுத்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அதன் மீதான விசாரணைக்கு ஆஜராகும்படி ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி விசாரணைக்கு குருமூர்த்தி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.