அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளவர், இந்திய, அமெரிக்க உறவை பைடனுடன் சேர்ந்து வலுப்படுத்த தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் ஒற்றுமையாக பணியாற்ற தனது வாழ்த்துகளை மோடி கூறியுள்ளார்.
இந்திய, அமெரிக்க நட்பு பன்முகத்தன்மை கொண்டது என்று குறிப்பிட்டுள்ள மோடி, இரு நாட்டு உறவுகளை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.