திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கி.பி.1564 முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. அந்நாளில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் 7 பெரிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்தவகையில் பிப்ரவரி மாதம் 19ம்தேதி நடைபெறும் ரதசம்தமி நிகழ்ச்சி, அதிகாலை சூரியபிரபை வாகனத்தில் தொடங்கி இரவு சந்திரபிரபை வாகனத்துடன் நிறைவு பெறுகிறது.
அன்று மதியம் 3 மணிக்கு நடைபெறக்கூடிய சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கொரோனா காரணமாக பக்தர்களின்றி கோயில் தெப்பக்குளத்தில் நடத்தப்படும். அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.