ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரிய வழக்கில், தங்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பதிலளித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறிய நீதிபதிகள், சட்டம் இயற்றும் அளவுக்கு அதிகாரம் கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ள மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.