இந்தியாவுக்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று, டிம் பெய்னி 50 ரன்களும் கேமரூன் கிரீன் 47 ரன்களும் நாதன் லயன்ஸ் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 20 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 369 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.