ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் கைதான சீனர்கள் இருவரிடம் ரா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் மூலம் 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி, மக்களின் செல்போனில் இருந்து சட்டவிரோதமாக தகவல்களை எடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து, டெல்லியில் இருந்து மொழிபெயர்ப்பாளரை வரவழைத்து, ரா மற்றும் மத்திய உளவுதுறை அதிகாரிகளும் சீனர்களிடம் விசாரணை நடத்தினர். 6 நாள் காவல் முடிந்து நான்கு பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.