அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை சீனா கேலியும், கிண்டலும் செய்துள்ளது.
அந்நாட்டு அரசின் நாளிதழான குளோபல் டைம்சின் இணைய பக்கங்களில், அமெரிக்க நாடாளுமன்ற கலவர காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றுக்கு அருகில் 2019 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்போது அந்த போராட்டக்காட்சிகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அழகான காட்சி என தமது இணைய பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை மேற்கொள் காட்டி உள்ள குளோபல் டைம்ஸ், இப்போதும் இந்த காட்சிகளை பெலோசி அதே போல வர்ணிப்பாரா என்று கேள்வி எழுப்பி உள்ளது.