சென்னை பெருநகரின், குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள், தொடர் கனமழை காரணமாக, மீண்டும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 6200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்படுகிறது. தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியதால், வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள புழல் ஏரிக்கு, 3000 கனஅடி தண்ணீர் வரத்து தொடரும் நிலையில், வினாடிக்கு 1500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.