கேரள மாநிலத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் மாணவ-மாணவிகள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்டமாக இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள், முதுகலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.
காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, அதிகபட்சம் 50 சதவீத மாணவர்களுடன், தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக பிரித்து வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளும் தொடரும் என்று தெரிவித்துள்ள கேரள அரசு, 10 நாட்களுக்குப் பிறகு அனைத்து மாணவர்களையும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளது.