கோவிஷீல்டு மற்றும் முற்றிலும் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் கிடைத்துள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இது கொரோனாவுக்கு எதிரான உணர்வுபூர்வமான போரை வலுப்படுத்தக்கூடிய ஒரு தீர்க்கமான திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தியா ஆரோக்கியமான, கொரோனா இல்லாத நாடாக மாறும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய மக்களுக்கும், இதற்காக கடினமாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.