சென்னையில் காலை முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், பாரிமுனை, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது.
மழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.