நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான 250 பக்க விசாரணை அறிக்கையை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பத்தினர், சக சின்னத்திநடிகை சித்ராவின் குடும்பத்தார், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது குடும்ரை கலைஞர்கள், அண்டை வீட்டார்கள் என 4 கட்டங்களாக ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.
5ம் கட்டமாக இன்று, நடிகை சித்ராவிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த ஆனந்த் என்பவரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், சித்ரா தற்கொலையில் வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என கோட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை அறிக்கை 250 பக்கங்களாக பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சனிடம் நாளை தாக்கல் செய்யப்படுவதாக ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.