குப்பைக் கட்டணம் விதிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. தற்போது கொரோனா பேரிடர் காரணமாக, இதை நிறுத்திவைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்ததாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
எனவே, சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, காலவரையறை இன்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.