செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் உறுதி... எதிர்க்கட்சிகளுக்கு., பிரதமர் எச்சரிக்கை.!

Dec 18, 2020 04:11:15 PM

விவசாயிகள் விளைவிக்கும், நெல், கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, தவறான தகவல்களை பரப்புவதை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் எச்சரித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில், "உழவர் நலன்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

விவசாய கிரடிட் கார்டுகளை, முந்தை ஆட்சிக்காலங்களைப் போன்று, பாகுபாடு பார்க்கமால், தமது தலைமையிலான மத்திய அரசு, அனைத்து விவசாயிகளுக்கு வழங்கியிருப்பதாக, பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, தவறான தகவல்களை பரப்பி, விவசாயிகளை, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் தவறாக வழிநடத்துவதாக, பிரதமர் குற்றம்சாட்டினார். புதிய வேளாண் சட்டங்கள் ஏதோ ஒருநாள் நள்ளிரவில் இயற்றப்பட்டு, அறிமுகம் செய்யப்படவில்லை என பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த இருபது, முப்பது ஆண்டுகாலமாக, மத்திய, மாநில அரசு வேளாண் சீர்திருத்தம் குறித்து, கலந்துரையாடல், ஆலோசனைகளை நிகழ்த்தியதன் அடிப்படையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக, பிரதமர் உறுதிபடக் கூறினார்.

விளைபொருள் கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், புதிய வேளாண் சட்டங்களால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை என உறுதியளித்தார்.

குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டால், எப்படி ஆண்டுக்காண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய பிரதமர், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சமே, குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை, எதிர்க்கட்சிகள் செளகர்யமாக மறைப்பதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருங்கல்லூரில் கத்தை கத்தையாக ரூ 500 நோட்டுக்களுடன் சூதாட்டம்..
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து .!
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு
மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து.!
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் சாலை விபத்து.!
வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்... பா.ம.க. வன்முறையை தூண்டுகிறது - திருமாவளவன்
இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement