தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அடுத்த மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவார் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என நடிகர் ரஜினிகாந்த் குற்றம் சாட்டிய நிலையில், விசாரணைக்கு வருமாறு கடந்த பிப்ரவரியில் சம்மன் அனுப்பப்பட்டது.
சினிமா படப்பிடிப்பை காரணம் காட்டி அப்போது அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் ரஜினிகாந்த் சாட்சியாக அழைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.