அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், கொரனோ நோய் தடுப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள்,விவசாய சங்க பிரநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுனருடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.