செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Dec 16, 2020 02:51:17 PM

ஆஸ்ரமம் பள்ளி வளாகத்தை வரும் ஏப்ரல் 30 க்குள் காலி செய்யவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என, லதா ரஜினிகாந்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளராக இருக்கும் லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்னை இருந்துவந்தது. 2013ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் கடந்த 2014ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்பின்னரும் வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்க கோரி லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார்.

ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு நீதிபதி தடைவிதித்துள்ளார்.


Advertisement
இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!
திருப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம்..!
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!
ரூ.30 கோடி மதிப்பில் 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி..!
பொலிவியாவில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு.. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கி கடும் சேதம்..!
தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை - விஜய் குற்றச்சாட்டு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது..தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..
பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!
கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை
மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement