அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சுரப்பா நீடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநலமனு தாக்கல் செய்திருந்தார். அதில் பஞ்சாப் மாநிலம் ரோபர் ஐ.ஐ.டி. இயக்குனராகவும், இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீனாகவும் சுரப்பா இருந்துள்ளதாகவும், அந்த பதவிகள் துணைவேந்தர் பதவிக்கு நிகரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
யுஜிசி விதிப்படி, ஒருவரை இருதடவைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 பதவிகளும் துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதற்கான ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.